தமிழ் சினிமாவில் தோல்விப் படங்களே கொடுத்திராத இயக்குனர்கள் ஒருசிலரே, அவர்களில் முதன்மை ஆனவர் வெற்றிமாறன். இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெற்றிமாறன், தனுஷ் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு ரிலீசான பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
இவர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 15 வருடங்கள் ஆனபோதிலும் இதுவரை 5 படங்களை மட்டுமே இயக்கி உள்ளார். இந்த 5 படங்களும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தரமான படங்கள் ஆகும். இவர் இதுவரை 5 தேசிய விருதுகளை வென்றுள்ளார். இவ்வாறு தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக உள்ள வெற்றிமாறன் இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.