தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என இரு வேடங்களிலும் திறம்பட நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சத்யராஜ். 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் சத்யராஜ், இன்றளவும் பிசியான நடிகராகவே வலம் வருகிறார். இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி, பாகுபலி போன்ற படங்கள் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.