தயாரிப்பாளரும், பிக்பாஸ் விமர்சகருமான ரவீந்தர் சந்திரசேகர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திடீரென திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான். இவர்கள் இருவரையும் திடீரென திருமண கோலத்தில் பார்த்ததும், அனைவரும் ஷாக் ஆகினர். ஒருவேளை ஏதேனும் படத்துக்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட் என்றெல்லாம் நினைக்க தொடங்கிவிட்டனர்.