இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால், தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இப்படத்தை அவரே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விவி ஸ்டூடியோஸ் மூலம் தயாரிக்கிறார். இப்படத்தின் தனது மகனின் பெயரான ஆர்யன் என்பதை டைட்டிலாக வைத்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கின்றனர்.