விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ராட்சசன். ராம்குமார் இயக்கிய இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். வெறும் 18 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.170 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அந்த ஆண்டின் அதிக லாபம் ஈட்டிய படமாகவும் ராட்சசன் திகழ்ந்தது.
தமிழில் ராட்சசன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததை அடுத்து அப்படத்தை பிறமொழிகளில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டினர். அப்படத்தின் ரீமேக் உரிமையை பெற கடும் போட்டி நிலவி வந்தது. அதன்படி இப்படம் கடந்த 2019-ம் ஆண்டு ராட்சசடூ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. அங்கும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
Image: Official film poster
இதையடுத்து இந்தியில் இப்படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்தனர். இப்படத்தில் அக்ஷய் குமார் நாயகனாக நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் இப்படத்திற்கு கட்புட்லி எனவும் பெயரிடப்பட்டு இருந்தது. ரஞ்சித் எம் திவாரி என்பவர் இப்படத்தை இயக்கி இருந்தார்.
இதையும் படியுங்கள்... டூ பீஸில் பார்த்தவுடன் பக்கென்றாக்கும் பாலிவுட் பிரபலம்...கிக் போட்டோஸ் இதோ !
இப்படம் நேற்று நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. வெளியானது முதல் இப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ராட்சசன் படத்தில் ஒரே ஒரு பாடல் தான் இருக்கும் அதுவும் படத்தோடு ஒன்றி பயணிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால் அதன் இந்தி ரீமேக்கான கட்புட்லி படத்தில் இரண்டு பாடல்களை சேர்த்துள்ளனர். அது கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. டூயட் பாடாமல் உங்களால் இருக்க முடியாதா என நடிகர் அக்ஷய் குமாரை நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.
ஒருசிலரோ, நல்ல வேளை இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகல என நிம்மதி அடைந்து வருகின்றனர். திரைக்கதையும் படுமோசமாக உள்ளதால் இப்படத்தை ஏன் ரீமேக் செய்தீர்கள் என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். கடந்த 6 மாதங்களில் அக்ஷய் குமார் நடிப்பில் மட்டும் 4 படங்கள் வெளியாகி உள்ளன. இந்த 4 படங்களும் ஃபிளாப் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கார்த்தியின் அடுத்த திட்டம் ..வெளிநாட்டு பெயரில் இறங்க முடிவாம்..