இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா. இவர் கடந்த 1997-ம் ஆண்டு ரிலீசான அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை, நந்தா, ராம், பருத்திவீரன், பில்லா, மங்காத்தா என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார் யுவன்.
இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் அவரது கலைச் சேவையை பாரட்டி இந்த டாக்டர் பட்டத்தை யுவனுக்கு வழங்கி உள்ளனர். இன்று சென்னையில் உள்ள சத்யபாமா கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் யுவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற யுவன் சங்கர் ராஜாவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் டாக்டர் பட்டம் பெற்றபோது எடுத்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன. சமீபத்தில் சிம்பு, இயக்குனர் ஷங்கர் ஆகியோர் டாக்டர் பட்டம் பெற்ற நிலையில், தற்போது யுவனுக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சிவாஜியின் சிலை அருகே மின் விளக்கு அமைந்த மாநகராட்சி..நேரில் சென்று பாராட்டிய பிரபு