தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார். சுமார் 7 ஆண்டுகள் உருகி உருகி காதலித்த இந்த ஜோடி கடந்த ஜூன் மாதம் திருமண பந்தத்தில் இணைந்தது. இவர்களது திருமணம் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது.
இந்நிலையில், சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீநிதி, விக்கி - நயன் ஜோடி பற்றி தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. அஜித்தின் வலிமை படத்தை விமர்சித்தது, நடிகர் சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியது என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீநிதி.