எது மாஸ்... மக்கள் சொல்லட்டும் - தனுஷை வம்பிழுத்தாரா சிம்பு... STR-ன் பேச்சு சர்ச்சையானதன் பின்னணி இதுதான்

First Published | Sep 3, 2022, 7:45 AM IST

Simbu : வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு, நடிகர் தனுஷை தாக்கி பேசியதாக குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.

மாநாடு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின் நடிகர் சிம்பு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. சிம்புவின் பேவரைட் இயக்குனரான கவுதம் மேனன் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். இவர்கள் கூட்டணியில் இதுவரை வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

வெந்து தணிந்தது காடு படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்துள்ளார். இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை சித்தி இலானி நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற செப்டம்பர் 15-ந் தேதி இப்படம் திரைகாண உள்ளது.

இதையும் படியுங்கள்... இனி... டாக்டர் U1... கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற யுவன் சங்கர் ராஜாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்துகொள்ள நடிகர் சிம்புவும், கமல்ஹாசனும் கெத்தாக ஹெலிகாப்டரில் வந்திறங்கியது கோலிவுட்டையே பிரம்மிப்பில் ஆழ்த்தியது.

Latest Videos


வழக்கமாக சிம்பு என்றாலே வம்பு என்று சொல்வர். ஆனால் சமீபகாலமாக இவர் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு பேசிய பேச்சு தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது. அவர் நடிகர் தனுஷை தாக்கி பேசியதாக குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்... தேசிய சினிமா தினம்... ஒரு நாள் மட்டும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட் விலை இவ்வளவு குறைவா?

கடந்த மாதம் நடைபெற்ற திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், எது மாஸ் என குறிப்பிட்டு, அடுக்கடுக்காக சிலவற்றை கூறி இருந்தார். அவரின் இந்த பேச்சு செம்ம வைரல் ஆனது. அதேபோல் இதை ஒரு மீம் டெம்பிளேட் ஆகவும் மாற்றி ஏராளமான மீம்ஸ்களும் போடப்பட்டன.

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு இசைவெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு பேசும்போது எது மாஸ்னு மக்கள் சொல்லட்டும் என கூறியதாகவும், இதன்மூலம் அவர் தனுஷை தாக்கி பேசியுள்ளதாக பதிவுகள் போடப்பட்டு வந்தன. ஆனால் உண்மையில் அங்கு நடந்தது என்னவென்றால், சிம்புவிடம் தொகுப்பாளர்கள் ஒரு கேள்வியை கேட்டுள்ளனர். வெந்து தணிந்தது காடு திரைப்படம் மாஸா அல்லது கிளாஸா என கேட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்த சிம்பு, நான் மாஸு, கிளாஸுன்னு சொல்ல விரும்பல. நம்ம படம் பண்றோம், அது தான் நம்ம வேலை. அது மாஸா, கிளாஸானு மக்கள் தான் சொல்லனும் என கூறியுள்ளார். சிம்பு தொகுப்பாளர்களின் கேள்விக்கு அளித்த பதிலை அது அவர், தனுஷை தாக்கி பேசியதாக பகிரப்பட்டு வருவதால் சிம்பு ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... டிரெண்டில் இணைந்த உலகநாயகன்... டுவிட்டரில் அந்த ஒரு வார்த்தையால் உள்ளத்தை அள்ளிய கமல்ஹாசன்

click me!