அதோடு மேல் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பாரதிராஜாவிற்கு அங்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. இதைடுத்து இசையமைப்பாளர் இளையராஜா, வைரமுத்து, ராதிகா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து இருந்தனர். அதோடு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் பிரபலங்கள் தெரிவித்தனர். இயக்குனருக்காக ரசிகர்கள் பலரும் பிராத்தனை செய்து வந்தனர்.
மேலும் செய்திகளுக்கு...வித்யாசமான உடையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய ஷில்பா ஷெட்டி... புடவையின் விலை எவ்வளவு தெரியுமா?
தற்போது பாரதிராஜாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் அவர் ஓரிரு நாளில் வீடு திரும்ப உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.