அஜித்துடன் பைக் ட்ரிப்பில் இணைந்த பிரபல நடிகை..! இப்போ எங்க இருக்காங்க தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்..!

Published : Sep 02, 2022, 08:10 PM IST

அஜித் தற்போது இமயமலைக்கு பைக் ட்ரிப் சென்றுள்ள நிலையில், இவருடன் பிரபல நடிகையும் இணைந்துள்ளார் இதுகுறித்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
14
அஜித்துடன் பைக் ட்ரிப்பில் இணைந்த பிரபல நடிகை..! இப்போ எங்க இருக்காங்க தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்..!

ஷூட்டிங் இல்லாதா நாட்களில் பைக்கில் ஹாய்யாக குட்டி ட்ரிப் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ள அஜித் தற்போது இமயமலைக்குட்ரிப்  சென்றுள்ளார். அவ்வப்போது இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

24

ஏற்கனவே வலிமை படத்தின், கிளைமேக்ஸ் காட்சி படமாக படக்குழு ஐரோப்பா சென்ற போது, படக்குழுவினர் ஒரே வாரத்தில் படப்பிடிப்பை முடித்து கொண்டு நாடு திரும்பிய போதும், அஜித் அங்கேயே தங்கி ஐரோப்பா மற்றும் லண்டன் போன்ற இடங்களுக்கு பைக்கில் சென்று வந்தார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானதோடு, உலகை பைக்கில் சுற்றிவரவேண்டும் என்கிற கனவோடு அஜித் உள்ளதாக அவரது மேனேஜர் தரப்பில் இருந்தே தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்: தேசிய சினிமா தினம்... ஒரு நாள் மட்டும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட் விலை இவ்வளவு குறைவா?
 

34

இதை தொடர்ந்து மீண்டும் அஜித் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்த நிலையில்,  கடந்த சில வாரங்களாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்த ஷூட்டிங் கலந்து கொண்டார். இதனை நிறைவு செய்த கையேடு மீண்டும், பைக் ட்ரிப்பை கையில் எடுத்துள்ளார். 

44

ajithபைக்கிலேயே இமயமலையை சுற்றி வரும் அஜித்தின் புகைப்படங்களும், வீடியோக்களும் தினந்தோறும் சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், தற்போது அஜித்தின் இந்த பைக் ட்ரிபிள் பிரபல நடிகை மஞ்சு வாரியரும் இணைந்துள்ளார். அஜித் நடிகை மஞ்சு வாரியருடன் லடாக் பகுதியில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மஞ்சு வாரியர் தற்போது அஜித்துக்கு ஜோடியாக ஏகே 61 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.

மேலும் செய்திகள்: ராமராஜன் - நளினி விவாகரத்துக்கு விக்ரம் பட நடிகை தான் காரணமா?
 

click me!

Recommended Stories