Theatre
தேசிய சினிமா தினத்தை முதல்முதலில் கொண்டாட துவங்கியது அமெரிக்கா தான். அங்கு வாழும் மக்கள்... வாழ்க்கைமுறை மிகவும் நவீன முறையை கொண்டுள்ளதால், திரையரங்கம் வந்து திரைப்படங்கள் படம் பார்ப்பது குறைந்து கொண்டே சென்றது. எனவே கடந்த சில வருடங்களாக தேசிய சினிமா தினம் என ஒரு நாளை கடைபிடிக்க துவங்கினர். அன்றைய தினம் சினிமா டிக்கெட் விளையும் மிகவும் குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நாளை சிறப்பிக்கும் விதமாகவும், சினிமா ரசிகர்கள் கொண்டாடும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்றை ஐநாக்ஸ், பிவிஆர், சினிப்ளிக்ஸ் போன்ற மல்டி-ப்ளெக்ஸ் திரையரங்கங்கள் அன்றைய ஒரு நாள்... எந்த படம் பார்த்தாலும், ரூ. 75 மட்டுமே டிக்கெட் கட்டணமாக பெற உள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.
எவ்வித எக்ஸ்ட்ரா கட்டணம் இல்லாமல், டிக்கெட் வாங்க விரும்பும் ரசிகர்கள் நேரடியாக வந்து டிக்கெட் பெற வேண்டும். ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்கினால்... டிக்கெட் விலையுடன் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிகிறது இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாக பலரும் தங்களது வரவேற்பை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: ராமராஜன் - நளினி விவாகரத்துக்கு விக்ரம் பட நடிகை தான் காரணமா?