இயக்குனராக வேண்டும் என்று திரையுலகில் காலடி எடுத்து வைத்தாலும், தொடர்ந்து சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் 'மண்ணுக்கேத்த பொண்ணு' என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். இந்த படத்தில், பாண்டியன், இளவரசி, கௌதமி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்கி முடித்த அடுத்த ஆண்டே... தமிழ் சினிமாவில், 1986 ஆம் ஆண்டு 'நம்ப ஊரு நல்ல ஊரு' படத்தில் ஹீரோவாக நடித்தார்.