நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் தோல்வியை தழுவியது. இதனால் அடுத்தபடத்தில் நிச்சயம் ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளார் விஜய். இவர் நடிக்கும் 66-வது படத்தை வம்சி இயக்கி வருகிறார். வாரிசு என பெயரிடப்பட்டு உள்ள இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.
வாரிசு படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைகாண உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த ஜூன் மாதம் நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகி வைரலாகின. இதையடுத்து இப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை.
இந்நிலையில், வாரிசு படத்தின் அடுத்த அப்டேட் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வாரிசு படக்குழு அப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. நடிகர் விஜய்யின் எண்ட்ரி சாங்கை தான் அப்படக்குழு முதலாவதாக ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... தங்கமாய் ஜொலிக்கும் பூஜா ஹெக்டே..சல்வாரில் கியூட் போட்டோஸ் இதோ !