தங்கமாய் ஜொலிக்கும் பூஜா ஹெக்டே..சல்வாரில் கியூட் போட்டோஸ் இதோ !

First Published | Sep 2, 2022, 1:05 PM IST

 தற்போது கோல்டன் கலர் சல்வார் அணிந்து பூஜா ஹெக்டே கொடுத்துள்ள அழகிய போஸ்கள் லைக்குகளை பெற்று வருகிறது.

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய பீஸ்ட் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் பூஜா ஹெக்டே. தமிழுக்கு ரீ என்ட்ரி கொடுத்த இவருக்கு  சரியான திருப்புமுனையாக இந்த படம் அமைந்தது.

இவரின் முதல் படம் ஜீவா நடித்த முகமூடி. ஆனால் இந்த படம் இவருக்கு போதுமான அறிமுகத்தை தரவில்லை என்று கூறலாம். 2012 -ம் ஆண்டு வெளியான இந்த படம் இவருக்கு பெரிய அறிமுகத்தை வழங்கவில்லை.

Tap to resize

பின்னர் தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு பக்கம் சென்று விட்ட பூஜா ஹெக்டே. அங்கு முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபல நடிகையாக மாறிவிட்டார். இதை தொடர்ந்து அங்கேயே செட்டிலான இவர் பீஸ்ட் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.

இந்த படத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவருக்கு பலத்த வரவேற்பு இருந்தது. பீஸ்ட் உடன் சேர்த்து பிரபாஸின் ராதே ஷ்யாம்,  ரேம் சரணின் ஆச்சாரியா உள்ளிட்ட படங்களிலும் நாயகியாக தோன்றியிருந்தார்.

pooja hegde

ஆனால் இந்த மூன்று படங்களும் போதுமான ஹிட் கொடுக்காமல் தோல்வியை சந்தித்தது. இதனால் பூஜா ஹெக்டேவின் மீது பிளாக் மார்க் விழுந்துவிட்டது என்னும் சூழ்நிலைகள் சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் விழாவில் ரெட் கார்ப்பரேட்டில் வாக் செய்யும் வாய்ப்பைப் பெற்றார் பூஜா ஹெக்டே.

pooja hegde

அதோடு தற்போது பாலிவுட்டில் எக்கச்சக்க பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருகிறது. இதற்கிடையே அவ்வப்போது அழகான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் பூஜா. இவர் ஜிம் உடை அணிந்த சுற்று திரிந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது. இதை அடுத்து தற்போது கோல்டன் கலர் சல்வார் அணிந்து கொடுத்துள்ள அழகிய போஸ்கள் லைக்குகளை பெற்று வருகிறது.

Latest Videos

click me!