என்ன ஒரு தாராள மனசு... படம் பிளாப் ஆனதால் சம்பளத்தை திருப்பிகொடுத்த அமீர்கான் - அதுவும் எத்தனை கோடி தெரியுமா?

Published : Sep 02, 2022, 11:48 AM IST

Aamir Khan : அமீர்கான் நடிப்பில் கடந்த மாதம் ரிலீசான லால் சிங் சத்தா திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.100 கோடி வரை நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது.

PREV
14
என்ன ஒரு தாராள மனசு... படம் பிளாப் ஆனதால் சம்பளத்தை திருப்பிகொடுத்த அமீர்கான் - அதுவும் எத்தனை கோடி தெரியுமா?

பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அமீர்கான். இவர் நடிப்பில் அண்மையில் ரிலீசான திரைப்படம் லால் சிங் சத்தா. இது ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு ரிலீசாகி ஆஸ்கர் விருது வென்ற பாரஸ்ட் கோம்ப் படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இப்படத்தில் நடிகர் அமீர்கானுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடித்திருந்தார்.

24

இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் ராணுவ வீரராக நடித்திருந்த வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் சேதுபதி தான். அவர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியதால், அவருக்கு பதில் நாக சைதன்யா நடித்தார். இப்படம் சுமார் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... ஹாலிவுட் பட சீனை அப்படியே காப்பி அடிச்ச கோப்ரா படக்குழு... வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு விளாசும் நெட்டிசன்கள்

34

இப்படம் கடந்த மாதம் 11-ந் தேதி இந்தி, தமிழ் உள்பட 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது. அமீர்கான் மீது கொண்ட வெறுப்பு காரணமாக இப்படத்தின் ரிலீசின் போது பாய்காட் டிரெண்ட் தலைதூக்கியது. இதன் தாக்கம் படத்தின் வசூலிலும் எதிரொலித்தது. இதனால் லால் சிங் சத்தா படம் படுதோல்வியை சந்தித்தது.

44

இப்படம் கிட்டத்தட்ட ரூ.100 கோடி வரை நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக நடிகர் அமீர்கான் தனக்கு சம்பளமே வேண்டாம் என திருப்பிக்கொடுத்துள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு இப்படத்திற்காக ரூ.50 கோடி சம்பளமாக பேசப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அமீர்கானின் இத்தகைய செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... 'பொன்னியின் செல்வன்' பெரிய பழுவேட்டரையர் - சின்ன பழுவேட்டரையர் தோற்றத்தில் மிரள வைத்த சரத்குமார் - பார்த்திபன்

Read more Photos on
click me!

Recommended Stories