பாடகர் பம்பா பாக்யா காலமானார். அவருக்கு வயது 49. தமிழ் திரையுலகில் ஏராளமான திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அப்படி அவரான் கண்டறியப்பட்ட ஒரு திறமையாளர் தான் பம்பா பாக்யா. பாடகரான இவர், ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான ராவணன் படத்தில் இருந்தே பாடி வருகிறார்.