தமிழில் தளபதி விஜய்க்கு கோடியாக 'மாஸ்டர்' படத்தில் மாஸ் கதாநாயகியாக அறிமுகம் கொடுத்தவர், மாளவிகா மோகனன். முதல் படமே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்தது இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்பட்ட நிலையில், தாற்போது தமிழில் முன்னணி ஹீரோயின் பட்டியலில் இருந்து விலகிவிட கூடாது என மிக கவனமாக கதைகளை தேர்வு செய்து நடிக்க காத்திருக்கிறார்.
மேலும் வலுவான கதைக்களம் கொண்ட, சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் தற்போது நடித்து வருகிறார். ஹிந்தியில் இவருக்கு அடுத்தடுத்த சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது கடல் கன்னி போன்று உடலோடு ஒட்டி இருக்கும் ஓவர் டைட் உடையில்... மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள சில லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.