சீரியல் நடிகை மஹாலட்சுமி, இன்று திருப்பதியில் திடீர் என, தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில், மகாலட்சுமி குடும்பத்தை சேர்ந்தவர்கள், மற்றும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளை சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புதுமண தம்பதியை வாழ்த்தினர்.
இது ஒருபுறம் இருக்க, மஹாலக்ஷ்மி ஏன் முதல் கணவரை பிரிந்தார் என்பது குறித்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. மஹாலட்சுமி அனில் குமார் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ள நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக, மஹாலட்சுமி கணவரிடம் கோபித்து கொண்டு மகனை அழைத்து கொண்டு தன்னுடைய அப்பா - அம்மா வீட்டிக்கு சென்றுவிட்டார்.
அதன் பின்னர் தான் சீரியல் நடிகர் ஈஸ்வருடன் கள்ளக்காதல் கிசுகிசுவில் சிக்கினார் மஹாலக்ஷ்மி. ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ மஹாலக்ஷ்மி மற்றும் ஈஸ்வர் ஒன்றாக எடுத்த புகைப்படங்கள், வீடியோ, சேட்டிங் போன்றவற்றை வெளியிட்டு பகீர் கிளப்பினார். இதற்க்கு மகாலக்ஷ்மி,ஈஸ்வர் தன்னுடைய நண்பர் என தொடர்ந்து கூறிவந்த நிலையில், இந்த பிரச்சனை சீரியல் வட்டாரத்தில் ஒரு ப்ரளயத்தையே ஏற்படுத்தியது.
பின்னர், ஒரு சிறு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சீரியலில் நடிக்க வந்த மஹாலட்சுமி... தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அன்பே வா' சீரியலில் நடித்து வருகிறார். கணவரிடம் இருந்து இவர் விவாகரத்து பெற்று இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது திடீர் என தயாரிப்பாளர் ரவீந்தரனை திருமணம் செய்து கொண்டு, அதிர்ச்சி கொடுத்துள்ளார். இவரகளது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: நீண்ட நாள் காதலியை கரம்பிடித்து குக் வித் கோமாளி புகழ்..! வைரலாகும் திருமண போட்டோஸ்..!