சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு தயாரிப்பாளர் ரவீந்தருடன் திடீர் என நடந்த இரண்டாவது திருமணம்! வைரலாகும் போட்டோஸ்!

Published : Sep 01, 2022, 04:32 PM ISTUpdated : Sep 01, 2022, 04:42 PM IST

சீரியல் நடிகை மகாலட்சுமி, பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை இன்று இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமண புகைப்படம் தற்போது வெளியாக பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

PREV
16
சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு தயாரிப்பாளர் ரவீந்தருடன் திடீர் என நடந்த இரண்டாவது திருமணம்! வைரலாகும் போட்டோஸ்!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை துவங்கி, பின்னர்  சீரியல் நடிகையாக மாறியவர் நடிகை மகாலட்சுமி. இவர் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது ரவீந்தரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.  

26

'அரசி' சீரியல் மூலம் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க துவங்கிய இவர், இதை தொடர்ந்துஅடுத்தடுத்து பல சீரியல்களில், வில்லி முதல் எப்படி பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை உள்வாங்கி கொண்டு நடிக்கும்  அளவிற்கு திறமையானவர் என பெயர் எடுத்தவர்.

36

இவர் அனில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், குழந்தை பிறந்த சில வருடங்களிலேயே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இதை தொடர்ந்து, தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்த மஹாலக்ஷ்மி சீரியலில் நடித்த போது, அந்த சீரியல் நாயகன் ஈஸ்வருடன் பழகி வருவதாக, ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
 

46

ஒருவழியாக தற்போது அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு மீண்டும் சீரியலில் இவர் கவனம் செலுத்தி வரும் நிலையில், இன்று திடீர் என, பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை மஹாலட்சுமி திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் இரண்டாவது திருமணம் என்பது குறிபிடத்தக்கது.

56

இவர் தமிழில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ், கல்யாணம் போன்ற படங்களை தயாரித்துள்ளார். அதே போல், சில படங்களை விநியோகம் செய்து வருவது மட்டும் இன்றி, நடிகராகவும் உள்ளார். மிகவும் ரகசியமாக இவர்களது திருமணம் நடந்து முடிந்திருந்தாலும், இவர்களது திருமண புகைப்படங்களை தற்போது ரவீந்தர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

66

இவர்களது திருமணம் திருப்பதியில் நடந்துள்ள நிலையில், இந்த புகைப்படத்தை வெளியிட்டு சமூக வலைதளத்தில் ரவீந்திரன் கூறியுள்ளதாவது... மகாலட்சுமி போல பொண்ணு கிடைச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க... அந்த மகாலட்சுமியே வாழ்க்கைக்கு கிடைச்சா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும் விரைவில் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து விரைவில் லைவில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

click me!

Recommended Stories