விஜய், ரஜினி படங்களுக்கு பாடியும்... நிறைவேறாமல் போன பம்பா பாக்யாவின் ‘அந்த’ ஆசை

Published : Sep 02, 2022, 09:10 AM IST

Bamba Bakya : பம்பா பாக்யா முதன்முதலில் பாடிய படம் இராவணன். அப்படத்தில் இடம்பெறும் கிடா கிடா கறி அடுப்புல கிடக்கு என்கிற பாடலை பென்னி தயால் உடன் இணைந்து பாடி இருந்தார். 

PREV
14
விஜய், ரஜினி படங்களுக்கு பாடியும்... நிறைவேறாமல் போன பம்பா பாக்யாவின் ‘அந்த’ ஆசை

பாடகர் பம்பா பாக்யா இன்று காலமான செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 49 வயதே ஆகும் அவரின் திடீர் மரணத்தால் தமிழ் திரையுலகமே சோகத்தில் மூழ்கி உள்ளது. பாடகர்களுக்கு பெரும் கனவாக இருப்பது எப்படியாவது ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல் பாடிவிட வேண்டும் என்பது தான்.

24

ஆனால் பம்பா பாக்யாவோ ஏ.ஆர்.ரகுமான் இசையில் 5க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் பாடலை பாடி விட்டார். முதலில் மேடை கச்சேரிகளில் பாடி வந்த பம்பா பாக்யாவை பாடகராக அறிமுகப்படுத்தியதும் ஏ.ஆர்.ரகுமான் தான். பாக்யா என்ற பெயர் கொண்ட இவரை பம்பா பாக்யா ஆக்கியது ஏ.ஆர்.ரகுமான் தான். பல்பா என்பது ஆப்ரிக்க பாடகரின் பெயராம். அவரைப் போலவே இவர் பாடுவதால், பம்பா பாக்யா என பெயர் வைத்துவிட்டாராம் ரகுமான். தற்போது அதுவே அவரது அடையாளமாக மாறிவிட்டது.

34

பம்பா பாக்யா முதன்முதலில் பாடிய படம் இராவணன். அப்படத்தில் இடம்பெறும் கிடா கிடா கறி அடுப்புல கிடக்கு என்கிற பாடலை பென்னி தயால் உடன் இணைந்து பாடி இருந்தார். இதன்பின்னர் 8 ஆண்டுகளுக்கு வாய்ப்புகள் இன்றி தவித்து வந்த இவருக்கு, மீண்டும் தனது இசையில் உருவான எந்திரன் 2.0 படத்தில் பாட வாய்ப்பளித்தார் ஏ.ஆர்.ரகுமான். அதில் அவர் பாடிய புல்லினங்கால் பாடல் அனைவரின் மனதை வருடும் பாடலாக அமைந்தது.

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் பட பாடகர் பம்பா பாக்யா திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்

44

இதைத்தொடர்ந்து சர்கார், பிகில், இரவின் நிழல், பொன்னியின் செல்வன் என தனது படங்களில் தொடர்ந்து பாட வாய்ப்பளித்தார் ஏ.ஆர்.ரகுமான். இதன்மூலம் மிகவும் பேமஸ் ஆனார் பம்பா பாக்யா. இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை தொடர்ந்து பாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

ரஜினி, விஜய் போன்ற படங்களில் பாடியுள்ள அவர், தான் அஜித் படத்தில் பாட வேண்டும் என ரொம்ப ஆசைப்படுவதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஆனால் அவரின் அந்த ஆசை கடைசியில் நிறைவேறாமல் போய் உள்ளது. பம்பா பாக்யாவின் மறைவிற்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... 2.30 மணிநேரத்துக்கு மேல.. படம் எடுத்தா பாம்பு (கோப்ரா) கூட தோத்துபோகும்- அன்றே கணித்த விஜய்.. வைரலாகும் வீடியோ

click me!

Recommended Stories