தமிழ் திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன்மூலம் ஏராளமான படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்ட நிலையில், நேற்று திடீரென சீரியல் நடிகை மகாலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு அதிர்ச்சி கொடுத்தார் ரவீந்தர்.