ரயிலே தடம்புரண்டுரும் போல... தண்டவாளத்தில் நின்று தாறுமாறாக கவர்ச்சி போஸ் கொடுத்த தர்ஷா குப்தா - வைரல் Photos

First Published | Sep 3, 2022, 11:45 AM IST

Dharsha Gupta : வடகோவை ரயில்நிலையம் அருகே தண்டவாளத்தில் நடுவே நின்று உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்தபடி போட்டோஷூட் நடத்தி உள்ளார் தர்ஷா. 

கோவையைச் சேர்ந்த மாடல் அழகியான தர்ஷா குப்தா, நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். பின்னர் புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டபின் நடிகை தர்ஷா குப்தா மிகவும் பேமஸ் ஆனார். இந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர்.

அதோடு சினிமாவிலும் நடிகை தர்ஷா குப்தாவிற்கு வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வகையில், இவர் ஹீரோயினாக அறிமுகமான படம் ருத்ரதாண்டவம். திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகர் ரிச்சர்டு ரிஷிக்கு ஜோடியாக நடித்திருந்தார் தர்ஷா. இதையடுத்து தற்போது ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... அந்த விஷயத்தில் விக்கி ‘லக்கி’ இல்லை... நயனின் கணவர் பற்றி ஓப்பனாக பேசிய சர்ச்சை நடிகை ஸ்ரீநிதி

Tap to resize

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் தர்ஷா குப்தா, மேலும் பட வாய்ப்புகளை கைப்பற்றும் வண்ணம் விதவிதமாக போட்டோஷூட்டும் நடத்தி வருகிறார். அதிலும் இவர் நடத்தும் கிளாமர் போட்டோஷூட்டுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சில சமயங்களில் கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு போட்டோஷூட் நடத்தி அதகளம் செய்வார் தர்ஷா குப்தா.

அந்த வகையில், தற்போது இவர் நடத்தியுள்ள வித்தியாசமான போட்டோஷூட் வைரலாகி வருவதோடு, சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. தண்டவாளத்தில் நடுவே நின்று உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்தபடி போட்டோஷூட் நடத்தி உள்ளார் தர்ஷா. இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வந்தாலும், இதுபோன்று தண்டவாளத்தில் நின்று போட்டோஷூட் நடத்தி தவறான முன்னுதாரனமாக இருக்காதீர்கள் என சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அஜித்துடன் பைக் ட்ரிப்பில் இணைந்த பிரபல நடிகை..! இப்போ எங்க இருக்காங்க தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்..!

Latest Videos

click me!