நான் சொல்றபடி நடிச்சா தேசிய விருது கிடைக்கும்னு சொல்லி... 300 பெண்களை சீரழித்த சினிமா டைரக்டர் கைது

Published : Sep 03, 2022, 02:56 PM IST

salem : சினிமா இயக்குனரின் அலுவலகத்தில் இருந்து போலீசார் பறிமுதல் செய்த ஹார்டு டிஸ்குகளில் 300-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச காட்சி அடங்கிய வீடியோக்கள் இடம்பெற்று இருந்ததாம்.

PREV
13
நான் சொல்றபடி நடிச்சா தேசிய விருது கிடைக்கும்னு சொல்லி... 300 பெண்களை சீரழித்த சினிமா டைரக்டர் கைது

சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் வேல் சத்ரியன், இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘நோ’ என்ற பெயரில் புதிய திரைப்படம் எடுப்பதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அதில் நடிக்க நடிகைகள் தேர்வையும் நடத்தி வந்துள்ளார். சினிமாவில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்கிற முனைப்போடு வாய்ப்பு கேட்டு வரும் இளம்பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி மயக்கி உள்ளார் சத்ரியன். 

தான் எடுக்கும் படம் தேசிய விருதுக்கான படம் என்றும், அதில் தான் சொல்வது போல் நடித்தால் தான் விருது கிடைக்கும் என்று அந்த இளம்பெண்களின் பெற்றோரிடம் கூறி அவர்களின் அனுமதியோடு அந்த பெண்களை வசியம் செய்துள்ளார். முதலில் அந்த பெண்களை கவர்ச்சியாக நிற்க வைத்து போட்டோஷூட் எடுத்துள்ள சத்ரியன், பின்னர் அவர்களை ஆடைகளை அவிழ்க்க சொல்லி நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோவும் எடுத்துள்ளார். 

23

அந்த சமயத்தில் அவர்களுக்கு நடிக்க கற்றுத் தருவதுபோல சில பெண்களிடம் உல்லாசமாக இருந்து வந்துள்ளார் சத்ரியன். அவ்வாறு உல்லாசமாக இருந்ததையும் வீடியோ எடுத்து அந்த பெண்களை மிரட்டி பிளாக்மெயில் செய்து சீரழித்துள்ளார். அவரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்னை, புதுச்சேரி, கோவை, திருப்பூர், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் என பல்வேறு ஊர்களில் இருந்து இளம்பெண்கள் வந்துள்ளனர். அவர்களை சீரழித்து ஏமாற்றி உள்ளார். 

இதையும் படியுங்கள்... மகன் பெயரையே படத்துக்கு டைட்டிலாக வைத்து... முதன்முறையாக செல்வராகவன் உடன் கூட்டணி அமைத்த விஷ்ணு விஷால்

இயக்குனர் சத்ரியனின் இந்த லீலைகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்தது கனகா என்கிற பெண்ணால் தான். இவரும் சத்ரியனிடம் வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார். இவரை முதலில் தனது அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்துக்கொண்ட சத்ரியன், சில நாட்கள் கழித்து ஆபாச படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட கனகா போலீசில் புகார் அளித்துள்ளார்.

33

அவர் கொடுத்த புகாரின் பேரில் வேல் சத்ரியன் மற்றும் அவரது உதவியாளர் ஜெயஜோதி ஆகியோர் மீது ஆபாச படம் எடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வேல் சத்ரியன் நடத்தி வந்த அலுவலகத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ஹார்டு டிஸ்குகள், ஆணுறை பாக்கெட்கள், லேப்டாப், பெண்டிரைவ் மற்றும் கேமராக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். 

போலீசாரிடம் பறிமுதல் செய்த ஹார்டு டிஸ்குகளில் வேல் சத்ரியனால் ஏமாற்றப்பட்ட 300-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச காட்சி அடங்கிய வீடியோக்கள் இடம்பெற்று உள்ளதாகவும், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அதில் இடம் பெற்றுள்ள இளம்பெண்களின் ஆபாச படங்களை வைத்து அவர்கள் யார் என்பதை அடையாளம் காணும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... என்னது ..ராஷ்மிகாவுக்கு ராசி இல்லையா?..பாலிவுட்டில் மோசமான பெயரை சம்பாதித்த வாரிசு பட நாயகி

Read more Photos on
click me!

Recommended Stories