தமிழ் சினிமாவில் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவனில் தொடங்கி ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என இவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்களாகும்.
அந்த வகையில், வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது உருவாகி விடுதலை படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி வெற்றிமாறனின் புகைப்படங்களுடன் கூடிய போஸ்டர்களை வெளியிட்டு, இப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆவதை அதன் மூலம் உறுதிப்படுத்தி உள்ளது படக்குழு. மேலும் இந்த இரண்டு பாகங்களும் விரைவில் தியேட்டர்களில் வெளியாகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த இரண்டு போஸ்டர்களும் வைரலாகி வருகின்றன.