காதலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார் பா.இரஞ்சித். நாடகக் காதல், ஓரினச் சேர்க்கையாளர்களின் காதல் பற்றியும் இப்படத்தில் பேசி உள்ளனர். கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் ரிலீசான இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பா.இரஞ்சித்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தி உள்ளார். ரஜினியின் வாழ்த்தால் உற்சாகமடைந்த பா.இரஞ்சித், அவர் என்ன சொன்னார் என்பதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.