தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். அவர்கள் இருவரும் திடீரென திருமணம் செய்துகொண்டது அனைவருக்குமே அதிர்ச்சியாகவே இருந்தது. கடந்த சில நாட்களாகவே கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக இருந்தது இவர்களது திருமண பேச்சு தான்.
24
ரவீந்தர் - மகாலட்சுமி திருமணத்துக்கு வாழ்த்துக்கள் ஒருபுறம் குவிந்து வந்தாலும், மறுபுறம் அதிகளவில் ட்ரோல்களும் செய்யப்பட்டு வந்தன. நடிகை மகாலட்சுமி காசுக்காக தான் அவரை திருமணம் செய்துகொண்டதாக கடுமையாக விமர்சித்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுத்த மகாலட்சுமி, ரவீந்தர் தான் தன்னை காதலிப்பதாக முதலில் புரபோஸ் செய்ததாகவும், மனசை பார்த்து தான் அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், ரவீந்தர் திருமணத்தை விமர்சித்தவர்களுக்கு நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான காஜல் பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி மகாலட்சுமி - ரவீந்தர் திருமணத்தை ட்ரோல் செய்தவர்களின் பதிவுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காஜல். அதில் ஒருவர், “என்னடா கிளிய வளத்து பன்னிகிட்ட குடுத்துட்டீங்க... பணம் பண்ற வேலை” என குறிப்பிட்டிருந்தார்.
44
மற்றொரு பதிவில், மனசை மனிபர்ஸுகுள்ள ஒழிச்சி வெச்சிருக்காங்களா என ஒரு பெண் பதிவிட்டதை பார்த்து கடுப்பான காஜல், அவருக்கு பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளதாவது : “அது எப்டிங்க... நயன் விக்னேஷ கட்டிக்கிட்டாலும் நயன் தான் தப்பு. மஹா ரவிய கட்டிக்கிட்டாலும் மஹா தான் தப்பு. என்ன ஒரு ஆம்பள புத்தி” என விளாசியுள்ளார். காஜலின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.