விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும், 'பாரதி கண்ணம்மா' சீரியல் ஒரு மாதத்திற்கு முன்பாகவே முடிவடையும் என நினைத்த நேரத்தில் எதிர்பாராத திருப்பங்களுடன் மீண்டும் சீரியல் புதிய கோணத்தில் ஒளிபரப்பாக துவங்கியது.
பாரதி DNA டெஸ்ட் எடுத்ததன் மூலம், ஹேமா மற்றும் லட்சுமி ஆகியோர் தனக்கு பிறந்த குழந்தைகள் தான், கண்ணம்மா குற்றமற்றவள் என்பதை புரிந்து கொண்டு, வெண்பாவின் சூழ்ச்சியால் தான் பல தவறுகள் நடந்தது என்பதை தெரிந்து கொள்கிறார். எனவே, மீண்டும் தன்னுடைய குழந்தைகள் மற்றும் கண்ணம்மாவுடன் வாழ ஆசை படும் நேரத்தில், கண்ணம்மா இனி எனக்கு நீங்கள் வேண்டாம் என கூறியதோடு தன்னுடைய மகள்களுடன், தன்னுடைய அப்பாவின் பூர்வீக ஊருக்கு சென்று வாழ்த்து வருகிறார்.
அந்த ஊரில் வசிக்கும் பாண்டி என்பவன்... தனக்கும் கன்னமாவிற்கும் தவறான உறவு உள்ளது என்று கூற, பின்னர் பாரதிக்கும் பாண்டிக்கும் ஏற்படும் சண்டையில் பாரதியின் மண்டையில் பலத்த காயம் ஏற்படுகிறது.
vijay tv bharathi kannamma
மேலும் மருத்துவர் பாரதி மீண்டும் பழைய நினைவுகளை பெற வேண்டும் என்றால்... பாரதியுடன் இருக்க வேண்டும் என கூறுகிறார். இதனால் பாரதியின் குடும்பமே, மீண்டும் கண்ணம்மாவை பாரதியுடன் சேர்ந்து வாழ வற்புறுத்தும் நிலையில்... தன்னால் அவருடன் இருக்க முடியாது என ஆடம் பிடிக்கிறார். எனினும் மனம் மாறி, பாரதி குணமடைய உதவுவாரா கண்ணம்மா? என்கிற பரபரப்பு காட்சிகளுடன் இறுதி அத்தியாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இந்த சீரியல்.