கல்யாணமாகி 7 ஆண்டுகளுக்கு பின் குட் நியூஸ் சொன்ன மணிமேகலை - குவியும் வாழ்த்து

Published : Dec 06, 2024, 08:20 AM IST

Vijay Tv Anchor Manimegalai : விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றியதன் மூலம் பிரபலமான மணிமேகலை தற்போது குட் நியூஸ் ஒன்றை சமூக வலைதளம் வாயிலாக சொல்லி இருக்கிறார்.

PREV
17
கல்யாணமாகி 7 ஆண்டுகளுக்கு பின் குட் நியூஸ் சொன்ன மணிமேகலை - குவியும் வாழ்த்து
Manimegalai, Hussain

சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தன்னுடைய கெரியரை தொடங்கியவர் மணிமேகலை. இதையடுத்து படிப்படியாக விஜய் டிவி பக்கம் தாவிய அவர், கடந்த 2017-ம் ஆண்டு ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த சமயத்தில் இவர்களது திருமணம் பரபரப்பாக பேசப்பட்டது.

27
Manimegalai Husband Hussain

ஹுசைன் லாரன்ஸ் மாஸ்டரிடம் டான்சராக பணியாற்றி வந்தார். லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா திரைப்படத்தில் ஹுசைன் சைடு டான்சராக நடனமாடுவதை பார்த்து இம்பிரஸ் ஆன மணிமேகலை அவர் மீது காதல் வயப்பட்டு பின்னர் அவரையே திருமணமும் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் பல சவால்களை எதிர்கொண்டார் மணிமேகலை.

37
Hussain Manimegalai New Home

குறிப்பாக சென்னையில் வாடகை வீட்டில் வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்ட மணிமேகலைக்கு விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக கலந்துகொண்டு கலக்கி மணிமேகலை, ஒரு கட்டத்தில் அதில் இருந்து விலகி பின்னர் ஆங்கராக பணியாற்றினார்.

இதையும் படியுங்கள்... சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ! புது ஹீரோ யார் தெரியுமா?

47
Vijay TV Anchor Manimegalai

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த இரண்டு சீசன்களாக தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த மணிமேகலை, அண்மையில் நடந்து முடிந்த அந்நிகழ்ச்சியின் 5வது சீசனில் பிரியங்கா உடன் ஏற்பட்ட மோதலால், உங்க வேலையே வேண்டாம் என தூக்கி எறிந்துவிட்டு விஜய் டிவியை விட்டு விலகினார். 

57
Manimegalai Built New House

விஜய் டிவியை விட்டு விலகிய கையோடு தற்போது குட் நியூஸ் ஒன்றை சொல்லி இருக்கிறார் மணிமேகலை. அதன்படி தான் சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி இருக்கும் தகவலை சந்தோஷமாக பகிர்ந்துகொண்டுள்ளார் மணிமேகலை. மேலும் அந்த வீட்டிற்கு நேற்று கிரஹப்பிரவேஷமும் செய்து அதில் குடியேறி இருக்கிறார்.

67
Manimegalai New Home House Warming Ceremony

இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள மணிமேகலை, திருமணமான பின்னர் மாதம் 10 ஆயிரம் வாடகை கொடுக்கவே கஷ்டப்பட்டோம், ஆனால் இன்று சென்னையின் பிரைம் லொகேஷனில் ஒரு பிரீமியம் வீடு வாங்கி இருப்பதன் மூலம் எங்களது மிகப்பெரிய கனவு நனவாகி இருக்கிறது. இது என் வாழ்வில் ஒரு சாதனையாக கருதுகிறேன்.

77
Manimegalai Home House Warming Photos

யாருடைய உதவியும் இல்லாமல் ஜீரோவாக எங்களுடைய வாழ்க்கையை தொடங்கினோம். கடந்த 2021-ம் ஆண்டே இந்த வீட்டை புக் செய்துவிட்டோம். அதன் பணிகள் எல்லாம் முடிந்து தற்போது தான் எங்கள் கைக்கு வந்தது என குறிப்பிட்டு ஸ்ரீராம ஜெயம்; மாஷா அல்லாஹ் என்று பதிவிட்டு தன் பதிவை முடித்திருக்கிறார் மணிமேகலை.

இதையும் படியுங்கள்... முதல் நாளே RRR, பாகுபலி பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய புஷ்பா 2!

click me!

Recommended Stories