முதல் நாளே RRR, பாகுபலி பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய புஷ்பா 2!

Published : Dec 06, 2024, 07:26 AM IST

Pushpa 2 The Rule Box Office Collection : சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் திரைக்கு வந்துள்ள புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

PREV
15
முதல் நாளே RRR, பாகுபலி பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய புஷ்பா 2!
Allu Arjun

தெலுங்கு திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவரை பான் இந்தியா ஹீரோவாக உயர்த்திய படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வந்த இப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. குறிப்பாக பாலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. புஷ்பா படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிபெற்றது மட்டுமின்றி விருதுகளையும் வென்று குவித்தது.

25
Pushpa 2 The Rule

குறிப்பாக புஷ்பா படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இவ்விருதை வாங்கும் முதல் தெலுங்கு நடிகர் என்கிற பெருமையை இதன்மூலம் பெற்றிருக்கிறார் அல்லு அர்ஜுன். புஷ்பா படத்தின் வெற்றிக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவெடுத்த படக்குழு, கடந்த மூன்று ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின்னர் புஷ்பா 2 திரைப்படத்தை டிசம்பர் 5-ந் தேதி உலகமெங்கும் திரைக்கு கொண்டுவந்துள்ளது.

இதையும் படியுங்கள்... தரமான சம்பவம் செய்த புஷ்பா 2 – அல்லு அர்ஜூன் மீது வழக்கு; கைது செய்யுமா போலீஸ்? 10 கோடி நஷ்ட ஈடா?

35
Pushpa 2 Allu Arjun

புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இப்படத்திலும் மாஸ் காட்சிகள் தூக்கலாக இருப்பதால் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். புஷ்பா 2 திரைப்படம் முன்பதிவிலேயே 100 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸை பதம் பார்த்த நிலையில், இப்படம் முதல் நாள் வசூல் என்ன என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் அளவுக்கு வசூல் மழை பொழிந்திருக்கிறது புஷ்பா 2 திரைப்படம்.

45
Pushpa 2 Collection

அதன்படி இந்தியளவில் இப்படம் முதல் நாளிலேயே ரூ.165 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய திரையுலக வரலாற்றிலேயே இதுவரை முதல் நாளில் எந்த ஒரு படமும் இவ்வளவு பெரிய தொகையை முதல் நாளில் வசூலித்தது இல்லை. இதன்மூலம் தான் ஒரு பான் இந்தியா ஸ்டார் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் அல்லு அர்ஜுன்.

55
Pushpa 2 Day 1 Box Office Collection

இதற்கு முன்னர் வரை ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் மற்றும் பாகுபலி 2 ஆகிய திரைப்படங்கள் மட்டுமே இந்தியாவில் 100 கோடிக்கு மேல் முதல் நாளில் வசூலித்து இருந்தன. அதில் ஆர்.ஆர்.ஆர் படம் முதல் நாளில் ரூ. 158 கோடியும், பாகுபலி 2 படம் முதல் நாளில் ரூ.137 கோடியும் வசூலித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளில் ரூ.165 கோடிக்கு மேல் வசூலித்து அந்த சாதனையை முறியடித்துள்ளது. மேலும் இப்படம் உலகளவில் ரூ.250 கோடி வரை வசூலித்திருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... ஆன்லைனில் லீக்கான புஷ்பா 2! தாறுமாறாக டவுன்லோட் செய்யும் நெட்டிசன்ஸ்!

Read more Photos on
click me!

Recommended Stories