விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகும், அனைத்து தொகுப்பாளர்களுக்குமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், இதில் மிகவும் ஸ்பெஷல்என்றால் அது டிடி தான்.
திவ்யதர்ஷினி தொகுப்பாளராகவும் சின்னத்திரையில் காலடி எடுத்து வைக்க உறுதுணையாக இருந்தவர் இவரின் சகோதரி ஆன பிரியதர்ஷினி தான்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில் ரேணுகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
பின்னர் விஜய் டிவிக்கு நுழைந்த டிடி, ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி... என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதன் மூலம் கிடைத்த பிரபலம், இவருக்கு சில வெள்ளித்திரை வாய்ப்புகளையும் பெற உதவியது.
மிகவும் கலகலப்பான பட்டாம் பூச்சி போல் சிறகடித்து வந்த சிடியை சற்று மனஅழுத்ததில் ஆழ்த்தியது என்றால் அது அவரின் விவாகரத்து விஷயம் தான்.
விவாகரத்துக்கு பின்னர் தான், ஃபேஷன் நிகழ்ச்சி, திரைப்பட நடிப்பு போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டி வந்த டிடி , காலில் அறுவை சிகிச்சை செய்துள்ள காரணத்தால் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்.
எனினும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் டிடி, அவ்வப்போது விதவிதமான உடையில் போட்டோ சூட் செய்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது, விதவிதமான சேலை அழகில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.