தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் பூஜா ராமச்சந்திரன். பேமஸ் ஆன விஜே-வாக வலம் வந்த பூஜாவுக்கு படிப்படியாக சினிமாவிலும் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2 போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி உள்ளார்.
26
இவர் கடந்த 2010-ம் ஆண்டு தன்னுடன் பணியாற்றிய சக தொகுப்பாளரான கேரிக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 7 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு கேரிக் உடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் பூஜா.
36
இதையடுத்து மலையாள நடிகர் ஜான் கொகேன் என்பவருடன் காதல் வயப்பட்டார் பூஜா. இதையடுத்து சில அண்டுகள் டேட்டிங் செய்துவந்த இந்த ஜோடி கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டது. திருமணத்துக்கு பின் ஜான் கொகேன் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
பாகுபலி, கே.ஜி.எஃப், கே.ஜி.எஃப் 2 போன்ற பிரம்மாண்ட படங்களில் நடித்துள்ள ஜான் கொகேன், கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற துணிவு திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். இதையடுத்து மேலும் சில படங்களும் இவர் கைவசம் உள்ளது.
56
ஜான் கொகேனின் மனைவி பூஜா, தற்போது கர்ப்பமாக உள்ளார். கர்ப்பமான வயிற்றுடன் இவர் தலைகீழாக யோகா பயிற்சி செய்யும் வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆன நிலையில், தற்போது தனது வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் பூஜா.
66
இந்த வளைகாப்பு நிகழ்வில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அதில் தனது காதல் கணவர் ஜான் கொகேன் உடன் மாலையும் கழுத்துமாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் நடிகை பூஜா ராமச்சந்திரன்.