'குக் வித் கோமாளி சீசன் 4' நிகழ்ச்சியில் இந்த முறை 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக கடந்த 3 சீசனில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த முறை குக்காக மாறி, சமையலிலும் அசத்தி வருகிறார். மேலும் நடிகை சிருஷ்டி டாங்கே, பிக் பாஸ் பிரபலமான நடிகை ஷெரின், நடிகை விசித்ரா, அஜித் பட நடிகர் ராஜா ஐயப்பா, பாக்கியலட்சுமி சீரியல் தொடர் ஹீரோ விஜே விஷால், காளையன், மைம் கோபி, கிஷோர் என பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.