பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் ஹூமா குரேஷி, பா.இரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற காலா படம் மூலம் தமிழில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காதலியாக நடித்திருந்தார் ஹூமா குரேஷி.
26
காலா படத்துக்கு பின் மீண்டும் பாலிவுட் படங்களில் பிசியான அவர், பின்னர் எச்.வினோத் இயக்கிய வலிமை படத்தின் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் அவர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவில்லை. போலீஸ் அதிகாரியாக நடித்ததோடு மட்டுமின்றி ஆக்ஷன் காட்சிகளிலும் துணிச்சலாக நடித்திருந்தார் ஹூமா குரேஷி.
36
வலிமை படத்தின் வெற்றிக்கு பின்னர் பாலிவுட்டுக்கு சென்ற அவர், அங்கு டபுள் எக்ஸ்.எல். என்கிற படத்தில் நடித்தார். இதில் மஹத் ராகவேந்திரா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். இப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலும் பாடி இருந்தார்.
இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி கலக்கி வரும் நடிகை ஹூமா குரேஷி, அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது சேலையில் அவர் கவர்ச்சியாக நாடத்தி உள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
56
கொசுவலை போன்ற கருப்பு நிற சேலையில், கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்துள்ள நடிகை ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு சோசியல் மீடியாவில் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
66
தமிழில் இதுவரை நடித்த காலா மற்றும் வலிமை ஆகிய இரண்டு படங்களிலும் கவர்ச்சி காட்டாமல் நடித்திருந்த ஹூமா குரேஷியின் இந்த கிக்கான கிளாமர் போட்டோஸ் கோலிவுட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.