Ganesh Venkatraman
இயக்குநர் ஜெய்தேவ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை பாவனா தமிழ் படத்தில் நடிக்க உள்ளார். திரில்லர் மற்றும் ஹாரர் சப்ஜெட் படமான இதில், வாரிசு திரைப்பட புகழ் கணேஷ் வெங்கட்ராம் நாயகனாக நடிக்கிறார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' படத்தில் கூட கணேஷ் வெங்கட் ரேம் வில்லனாக நடித்திருந்தார். தமிழில் முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கும் அவரது பாத்திரம் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது குதித்து நடிகர் கணேஷ் வெங்கட்ராம் கூறியதாவது… "வாரிசு படத்தின் வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. தெலுங்கு, இந்தி, மலையாளம் சினிமாவில் பலவிதமான கதாப்பாத்திரங்கள் நடித்துள்ளேன். தமிழில் நமக்கு வித்தியாசமான கதாப்பாத்திரம் கிடைப்பதில்லையே என நினைத்திருக்கிறேன். ஆனால் அது வாரிசு மூலம் நிறைவேறியிருப்பது மகிழ்ச்சி.
அதிலும் இப்படத்தில் எனது கேரக்டரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் அட்டகாசமாக இருந்ததாக அனைவரும் பாராட்டினார்கள். இது மிகப்பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இப்போது வாரிசை தொடர்ந்து, பல வித்தியாசமான கதபாத்திரங்கள் தமிழில் வர ஆரம்பித்திருக்கிறது. சில படங்களில் முழுக்க என் லுக்கை மாற்றிக்கொண்டு நடிக்கிறேன். வாரிசுக்கு பிறகு இப்போது இயக்குநர் ஜெய்தேவ் இயக்கத்தில் ஒரு ஹாரர் திரில்லர் படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் நடிகை பாவனா நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் நடிக்கிறார்.
அம்மா சத்தியமா சொல்றேன் இது உண்மை! 'குக் வித் கோமாளி' செட்டில் என்ன நடந்தது என கண்ணீரோடு கூறிய ஓட்டேரி சிவா!
கொடைக்கானல் சென்னை பகுதியில் நடக்கும் கதை. அன்னபெல்லா சேதுபதி படத்தின் ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புது அனுபவமாக இருக்கும். அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான படைப்புகள் எனது நடிப்பில் வரவுள்ளது. விரைவில் அது பற்றிய அறிவிப்புகளும் வரும் என்று கூறியுள்ளார்.