விஜய் டிவி தொலைக்காட்சியில், 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் திவ்ய தர்ஷினி. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் இவர் கலகலப்பாக தொகுத்து வழங்கி வரும் தனித்துவமான ஸ்டைலுக்கே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர்.
முன்னணி தொகுப்பாளினியாக இவர் இருந்த போதே, தன்னுடைய நீண்ட நாள் காதலரும், நண்பருமான ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர், சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் கவனம் செலுத்த துவங்கினார் திவ்ய தர்ஷினி. அந்த வகையில் பா.பாண்டி, துருவ நட்சத்திரம், மற்றும் காபி வித் காதல் போன்ற சில படங்களில் நடித்தார்.
மேலும் அவ்வப்போது, வெளிநாடுகளுக்கு சென்று அங்கு... எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ஹாட் அலப்பறை செய்து வரும் டிடி தற்போது ஹாலிவுட் ஹீரோயின் போல் சில புகைப்படங்களை வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.