நயன்தாராவுடன் ரொமான்டிக்காக டூயட் பாடும் ஷாருக்கான்! 'ஜவான்' பட பாடல் வீடியோ லீக் ஆனதால் ஷாக்!

Published : Apr 13, 2023, 06:15 PM ISTUpdated : Apr 13, 2023, 06:16 PM IST

ஷாருக்கான் - நயன்தாரா நடித்து வரும் ஜவான் படத்தில் இருந்து, இருந்து பாடல் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது படக்குழுவினரை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

PREV
14
நயன்தாராவுடன் ரொமான்டிக்காக டூயட் பாடும் ஷாருக்கான்! 'ஜவான்' பட பாடல்  வீடியோ லீக் ஆனதால் ஷாக்!

'பிகில்' படத்தின் வெற்றிக்கு பின், நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து.. இயக்குனர் அட்லீ  இயக்கி வரும் திரைப்படம் 'ஜவான்'. இந்த படத்தில் கோலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு கடந்த ஓராண்டாகவே மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் இருந்து பாடல் காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் லீக் ஆகி உள்ளது, ஒட்டுமொத்த பட குழுவினரையும் உச்சகட்ட அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
 

24

'பதான்' படத்தின் வெற்றிக்கு பின்னர், ஷாருக்கான் 'ஜவான்', படத்தில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் நடிப்பது மட்டும் இன்றி, தன்னுடைய மனைவியுடன் இணைத்து தயாரித்தும் வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் நடந்தது. இதில் நடிகை நயன்தாரா.. கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் சென்று கலந்து கொண்டார். ஏர்போர்ட்டில் தன்னுடைய குழந்தைகளுடன் நயன்தாரா நடந்து வந்த போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

மார்பகங்கள் இப்படி இருக்குனு விமர்சிச்சாங்க! சோகத்தை பகிர்ந்த ரஜினி பட ஹீரோயின் ராதிகா ஆப்தே!
 

34

தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள, இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து ரிலீஸ் தேதி, டீசர், ட்ரைலர் போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்...  தற்போது யாரோ சிலர், ஷாருக்கான் மற்றும் நயன்தாரா பாடல் காட்சியில் நடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

44

சொகுசு கப்பலில் இந்த பாடல் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. நயன்தாரா மற்றும் ஷாருகான் இருவரும் நடனம் ஆடும் போது எடுக்கப்பட்ட இந்த பாடலுக்கு ஃபராக் கான் நடன இயக்குனராக உள்ளதாகவும், அர்ஜித் சிங் என்பவர், இந்த பாடலை பாடியுள்ளதாகவும், தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பலகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடந்து வந்தாலும், இது போன்ற சம்பவங்கள் நடப்பதால் அட்லீ - ஷாருக்கான் உச்சகட்ட அதிர்ச்சியில் உள்ளார்களாம். மேலும்  இந்த வீடியோவை யாரும் சமூக வலைதளத்தில் பகிர வேண்டாம் என படக்குழு தரப்பில் இருந்து கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Breaking: நாளை வெளியாகுமா ருத்ரன்..? சற்று முன் நீதி மன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

Read more Photos on
click me!

Recommended Stories