Image: Radhika Apte Instagram
பிரபல பாலிவுட் நடிகையான, ராதிகா ஆப்தே.. ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கோலிவுட் திரையுலக ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமானவர். தமிழில், இவர் பிரகாஷ் ராஜ் நடித்த 'தோனி', படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அழகு ராஜா, படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு பின்னர், தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து பாலிவுட் திரையுலகில், சர்ச்சையான கதாபாத்திரங்களை கூட அசால்டாக ஏற்று நடித்து மிரட்டினார். குறிப்பாக இவர் அரை நிர்வாணமாக நடித்த படம் ஒன்றிற்காக இவரை தடை செய்யவேண்டும் என்று கூட பலர் சமூக வலைத்தளத்தில் பொங்கி எழுந்த சம்பவங்களும் உண்டு.
இதுகுறித்து அவர் கூறுகையில், தன்னுடைய மூக்கு சரி இல்லை என்பதற்காக சிலர் தனக்கு பட வாய்ப்புகள் கொடுக்க மறுத்ததாகவும், பின்னர் தன்னுடைய மார்பகங்கள் சிறிதாக இருப்பதாகவும், சிலர் விமர்சித்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதே போல் நான் கொஞ்சம் உடல் எடை கூடியதால் பல பட வாய்ப்புகளை இழந்ததாகவும் கூறியுள்ளார். இது போல் பெண்களை உருவ கேலி செய்பவர்கள் அது அவர்களின் உரிமை என கருதுவதாக ராதிகா ஆப்தே பேசியுள்ளது பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.