லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. நடிகர் விஜய் நாயகனாக நடித்து வரும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோ படத்தின் ஷூட்டிங் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கியது. இதையடுத்து 10 நாள் சென்னையில் ஷூட்டிங்கை நடத்திய படக்குழு, பின்னர் காஷ்மீருக்கு சென்று அங்கு 2 மாதங்கள் தங்கி படப்பிடிப்பை நடத்தியது.
லியோ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதுதவிர கவுதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், மலையாள நடிகர்கள் மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, நடிகை பிரியா ஆனந்த், பிக்பாஸ் பிரபலம் ஜனனி, சாண்டி மற்றும் விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்த நடிகர் கதிர் உள்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.