மணிரத்னம் இயக்கிய பிளாக்பஸ்டர் ஹிட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த நயன்தாரா... அடடா அதுவும் இந்த படமா!

First Published | Apr 13, 2023, 4:12 PM IST

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது குறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நயன்தாரா மனம்திறந்து பேசி இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. திருமணம் ஆகி குழந்தை பிறந்த பின்னரும் நடிகை நயன்தாராவுக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவர் நடிப்பில் தற்போது ஜவான் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படத்தை அட்லீ இயக்குகிறார். இப்படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்துள்ளார் நயன்தாரா.

இதுதவிர தமிழிலும் டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ளார். அதன்படி தற்போது நயன்தாராவின் 75 படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக ஜெய் நடிக்கிறார். மேலும் நடிகர் சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுதவிர சசிகாந்த் இயக்கத்தில் உருவாகும் டெஸ்ட் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார் நயன். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சித்தார்த் மற்றும் மாதவன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்... என் இதயம் எப்போதும் பிரபுவுக்காக துடிக்கும்... நடிகை குஷ்பு போட்ட உருக்கமான டுவிட் - பின்னணி என்ன?

Tap to resize

இந்நிலையில், சமீபத்தில் விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா, இயக்குனர் மணிரத்னம் கையால் விருதை வாங்கினார். அப்போது தான் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணியது குறித்து பேசினார். அதன்படி, மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என எல்லோருக்கும் ஆசை இருக்கும். எனக்கும் அவர் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அது கைநழுவிபோனது. ஆனால் எதிர்காலத்தில் அவர் படத்தில் நடிப்பேன்” என கூறினார்.

இருப்பினும் அந்த மேடையில் அவர் மணிரத்னம் இயக்கிய எந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணினார் என தெரிவிக்கவில்லை. ஆனால் உண்மையில். மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தான் நயன்தாரா மிஸ் பண்ணினார். இப்படத்தில் நயன்தாராவை குந்தவையாக நடிக்க வைக்க மணிரத்னம் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அது நடக்காமல் போனதால் திரிஷாவை அதில் நடிக்க வைத்தார்.

இதையும் படியுங்கள்... Breaking: நாளை வெளியாகுமா ருத்ரன்..? சற்று முன் நீதி மன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

Latest Videos

click me!