Jana Nayagan Star Cast Salary : எச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகன் படத்தின் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மிகப்பெரிய ஹைப் இருந்த படங்களில் ஜனநாயகனும் ஒன்று. விஜய்யின் கடைசி படம் இது என்பதால், இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்தே அதற்கான எதிர்பார்ப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையில் ஜனநாயகன் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் பிரச்சனையால் அப்படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கிப் போனது. அதன்பின்னர் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டதால், ஜனநாயகன் படம் கடந்த ஆறு மாதங்களாக ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் தற்போது அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து ஜனநாயகன் படம் திரைக்கு வர தயாராக உள்ளது.
ஜனநாயகன் படம் ஜூலை 23ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால், தமிழகம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டுள்ளது. திரையரங்குகளில் பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைத்து, அலங்காரம் செய்த வண்ணம் உள்ளனர் விஜய் ரசிகர்கள். ஜனநாயகன் திரைப்படம் ஏற்கனவே லீக் ஆகிவிட்டாலும், அதை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்கிற முனைப்போடு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால் அப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூலை வாரிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
35
ஜனநாயகன் சம்பள விவரம்
இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி ஜனநாயகன் படத்தின் நாயகன் விஜய் தான் அதிக சம்பளம் வாங்கி இருக்கிறார். அவருக்கு ரூ.220 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். அவருக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்றால் அது பாபி தியோல் தான். அவருக்கு ரூ.8 கோடி வழங்கப்பட்டு உள்ளது. அவர் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தில் மற்றொரு வில்லனாக நடித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், ரூ.5 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார்.
ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகைகளில், பூஜா ஹெக்டேவுக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள அவருக்கு ரூ.6 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. இவருக்கு அடுத்தபடியாக, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை பிரியாமணிக்கு ரூ.3 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர இப்படத்தில் நடித்துள்ள மற்றொரு நடிகையான மமிதா பைஜூவுக்கு மிக முக்கிய கதாபாத்திரமாக இருந்தாலும் அவர் ரூ.75 லட்சம் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளாராம்.
55
எச்.வினோத் சம்பளம் எவ்வளவு?
ஜனநாயகன் திரைப்படத்தை இயக்கியுள்ள எச்.வினோத்துக்கு ரூ.25 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். அவருடையே கெரியரில் அவர் வாங்கிய அதிகபட்ச தொகை இதுவாகும். அதேபோல் இப்படத்திற்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் அனிருத்துக்கு ரூ.13 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். இதுதவிர இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கெளதம் மேனனுக்கு ரூ.3 கோடியும், நடிகர் நரேனுக்கு ரூ.2.5 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.