Siragadikka Aasai : ரோகிணி வயித்துல வளர்றது என் குழந்தை இல்ல... அந்தர் பல்டி அடித்த மனோஜ்..!

Published : Jul 22, 2026, 09:02 AM IST

Siragadikka Aasai Serial 22 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்கு டைவர்ஸ் கொடுக்க மாட்டேன் என ஒரே போடாக போட்டுவிடுகிறார் ரோகிணி. இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், ரோகிணி, தான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்ததும் மனோஜுக்கு டைவர்ஸ் கொடுக்க முடியாது என ஒரே போடாக போட்டு விடுகிறார். டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போடுறேன்னு தான வந்த, இப்போ ஏன் கொடுக்க முடியாதுனு சொல்ற என வக்கீலும் விஜயாவும் ரோகிணியிடம் கேட்க, அதற்கு அவர், அப்போ நிலைமை வேற, இப்போ நிலைமையே மாறிடுச்சு. இப்போ மனோஜோட வாரிசை நான் வயித்துல சுமந்துகிட்டு இருக்கேன். என் குழந்தைக்கு அப்பா இல்லாம இருக்க கூடாது என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார் ரோகிணி.

இதையும் படியுங்கள்… Vaibhava Lakshmi Raja Yoga : வைபவ லட்சுமி ராஜ யோகத்தால் குபேர யோகத்திற்கு இணையான பலன்களை நான் ஸ்டாப் ஆக பெறப்போகும் 5 ராசிகள்!

25
முத்துவுக்கு வந்த டவுட்

மனோஜ் மட்டும் திருதிருவென முழித்துக் கொண்டிருக்கிறார். விஜயாவை தவிர அனைவருமே மனோஜை சந்தேகப்பட ஆரம்பிக்கிறார்கள். ரோகிணியை வீட்டை விட்டு துரத்தி 5 மாசத்துக்கு மேல ஆகுது. அப்புறம் எப்படி இது நடந்திருக்கும். ரோகிணி பொய் தான் சொல்றா, மனோஜ் எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டான் என விஜயா சொல்கிறார். விஜயா மனோஜுக்கு சப்போர்டாக பேசினாலும், முத்து அவரிடம் வளைச்சு வளைச்சு கேள்வி கேட்கிறார். ஆனால் மனோஜ் எந்த பதிலுமே சொல்லாமல் திருதிருவென முழிக்கிறார்.

35
பொய் சொன்ன மனோஜ்

அதன்பின்னர் வாய்க்கூசாமல் பொய் சொல்ல ஆரம்பிக்கிறார் மனோஜ். எனக்கும் இந்த குழந்தைக்கும் எந்த சம்பந்தமுமே இல்ல, நான் ரோகிணியை நைட்டு மீட் பண்ணுனதே இல்ல. இரண்டு தடவ கடைக்கு வந்தா, மத்தபடி எனக்கும் ரோகிணிக்கும் இடையே எதுவும் நடக்கல. ரோகிணி ஏன் இப்படி சொல்றானு எனக்கும் புரியல என மனோஜ் புருடா விடுகிறார். ஆனால் அண்ணாமலை மனோஜிடம் திரும்ப திரும்ப கேட்கிறார். இப்போலாம் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தாலே தெரிஞ்சிடும். ஒருவேளை நீ சொல்றது பொய்யா இருந்தா நம்ம குடும்பத்தோட மானமே போயிடும். எதுவா இருந்தாலும் இப்பவே சொல்லிரு என கூறுகிறார்.

45
அம்மாவிடம் உண்மையை சொல்லும் ரோகிணி

ஆனால் மனோஜ், தான் சொன்ன பொய்யை திரும்ப திரும்ப சொல்கிறார். மறுபுறம் ரோகிணி வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்றதும் ரோகிணியின் அம்மா, என்ன டைவர்ஸ், பேப்பரில் கையெழுத்து போட்டியா என கேட்க, அங்கு நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் ரோகிணி சொல்கிறார். இதையெல்லாம் கேட்ட, ரோகிணியின் அம்மா, ஒருவேளை நீ பொய் சொல்றியா என சந்தேகப்படுகிறார். நான் பொய் எதுவும் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் யாராவது பொய் சொல்வார்களா என சொன்ன பின்னரே அவர் நம்புகிறார்.

55
காத்திருக்கும் ட்விஸ்ட்

மறுபுறம் மனோஜ் பயங்கர டென்ஷனில் இருக்கிறார். எப்படியாச்சும், ரோகிணியிடம் இருந்து டைவர்ஸ் கிடைச்சிடும், கனகாவுடன் லைஃபில் செட்டில் ஆகிவிடலாம் என மனோஜ் பிளான் போட்டிருந்த நிலையில், இப்படி ஒரு பிரச்சனை வந்துவிட்டதே, என நினைத்து என்ன செய்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கிப் போய் இருக்கிறார் மனோஜ். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடக்கப்போகுது? மனோஜுக்கு ரோகிணி டைவர்ஸ் தர மாட்டேன் என சொன்னதால், மனோஜின் இரண்டாவது திருமணத்தால் பிரச்சனை வெடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories