Sun TV-யை காப்பியடித்த விஜய் டிவி... சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்களில் அதிரடி மாற்றம்

Published : Jul 20, 2026, 12:32 PM IST

Vijay TV Serials : சின்னத்திரையில் சன் டிவிக்கு நிகராக சீரியல்களை ஒளிபரப்பி வரும் விஜய் டிவி, தற்போது அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அது என்னென்ன மாற்றங்கள் என்பதை பார்க்கலாம்.

PREV
15
Change in Vijay TV Serials

சீரியல்கள் என்றாலே சன் டிவி என்று சொன்ன காலம்போய் தற்போது அதற்கு போட்டியாக விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவி என ஏராளமான சேனல்கள் சீரியல்களை ஒளிபரப்ப தொடங்கி உள்ளன. டிஆர்பி ரேஸில் சன் டிவிக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஏராளமான புது சீரியல்களை களமிறக்கி விஜய் டிவி, டிஆர்பி ரேஸில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சன் டிவியில் சில சீரியல்கள் வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த பார்முலாவை தற்போது விஜய் டிவியும் பின்பற்ற உள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai : கர்ப்பமான ரோகிணி... மனோஜின் டைவர்ஸ் பிளானில் மண்ணை அள்ளிப்போட்ட டாக்டர்..!

25
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இதன் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு தற்போது இரண்டாம் பாகத்திற்கும் கிடைத்து வருவதால், இந்த சீரியல் 1000 எபிசோடுகளை நெருங்கி வருகிறது. இந்த சீரியலில் ஸ்டாலின், நிரோஷா, கதிர், ஹேமா, வெங்கட் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த சீரியல் இந்த வாரம் முதல், திங்கள் முதல் ஞாயிற்றுக் கிழமை வரை வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

35
அய்யனார் துணை

விஜய் டிவியில் நம்பர் 1 சீரியலாக இருந்து வருவது அய்யனார் துணை. இந்த சீரியல் திங்கள் முதல் சனி வரை தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் 4 அண்ணன் தம்பிகளான சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இதில் நாயகியாக மதுமிதா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அரவிந்த் நடித்து வருகிறார். தற்போது டிஆர்பி ரேஸில் டாப் டிரெண்டிங்கில் இருக்கும் இந்த சீரியலும் இனி வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

45
சிறகடிக்க ஆசை

விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியல்களின் ஒன்றான சிறகடிக்க ஆசை, திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்போது மனோஜின் டைவர்ஸ் விவகாரம் தான் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட வந்த ரோகிணி, மயங்கி விழ, அவர் கர்ப்பமாக இருப்பதாக சொல்கிறார்கள். அந்த கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது தான் புரியாத புதிராக உள்ளது. இதனால் அடுத்தடுத்து பல்வேறு ட்விஸ்ட்கள் காத்திருக்கிறது. இந்த சீரியலும் வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாக உள்ளது.

55
எகிறப்போகும் டிஆர்பி

இப்படி சீரியல்களை வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்ப முடிவு செய்து அதனை வெற்றிகரமாக செய்து வருகிறது சன் டிவி. அந்த சேனலில் உள்ள எதிர்நீச்சல் சீரியல் 7 நாட்களும் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் விஜய் டிவி, தன்னுடைய டாப் 3 சீரியல்களை 7 நாட்களும் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளதால், அதற்கான டிஆர்பி ரேட்டிங் மளமளவென அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சன் டிவிக்கு இனி செம டஃப் கொடுக்கப் போகிறது விஜய் டிவி.

Read more Photos on
click me!

Recommended Stories