சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் பணத்தை முழுமையாக ஏற்பாடு செய்து வீட்டுக்கு கொண்டு வந்ததால், விஜயா மீண்டும் பழைய ஆணவத்துடன் நடக்க ஆரம்பிக்கிறார். முத்து மற்றும் மீனாவை குறைத்து பேசுவதோடு, மனோஜ்தான் எல்லாவற்றிலும் சிறந்தவன் என்ற விதத்தில் பெருமையாக பேசுகிறார். விஜயாவின் இந்த பேச்சால் மீனாவுக்கு கடும் கோபம் ஏற்படுகிறது. இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடிக்கிறது. குடும்பத்தில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாக, அந்த சண்டையோடு அந்த காட்சி முடிவடைகிறது.
25
ரோகிணியை வீட்டுக்கு வரச்சொன்ன மனோஜ்
இதற்குப் பிறகு விஜயா உடனடியாக மனோஜுக்கு போன் செய்து, ரோகிணியை தொடர்புகொண்டு "நாளைக்கே வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக்கொண்டு விவாகரத்து ஆவணத்தில் கையெழுத்து போடச் சொல்லு" என்று கட்டளையிடுகிறார். மனோஜும் ரோகிணியிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என்று நினைத்தாலும், அவள் மீது இருக்கும் பாசம் இன்னும் குறையவில்லை. அதனால் மிகுந்த தயக்கத்துடன் ரோகிணிக்கு போன் செய்து விஷயத்தை தெரிவிக்கிறார். அந்த செய்தியை கேட்டதும் ரோகிணி முற்றிலும் அதிர்ச்சியடைந்து, வாழ்க்கையே முடிந்துவிட்டது போல மனம் உடைந்து கதறி அழுகிறார்.
35
முத்துவுக்கு வந்த சந்தேகம்
மறுபுறம், முத்துவும் மீனாவும் பேசிக்கொண்டிருக்கும்போது, "மனோஜுக்கு இவ்வளவு பெரிய தொகை எப்படி கிடைத்தது? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது" என்று முத்து தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் மீனா, "எப்படியோ பணம் கிடைத்துவிட்டது... அதை விட்டுவிடுங்கள்" என்று சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். இதற்கிடையில் விஜயா, பார்வதிக்கு போன் செய்து, "நாளை காலை சரியாக 10 மணிக்கு வீட்டுக்கு வா... ஒரு முக்கியமான விஷயம் நடக்கப் போகிறது" என்று அழைக்கிறார். காரணம் கேட்ட பார்வதியிடம், ரோகிணியிடம் பணத்தை கொடுத்து விவாகரத்து ஆவணத்தில் கையெழுத்து வாங்கும் நிகழ்வை பெருமையாக சொல்கிறார்.
ஆனால் பார்வதி அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். "இது கொண்டாட வேண்டிய விஷயம் இல்லை. அமைதியாக முடிக்க வேண்டிய ஒரு குடும்ப விஷயத்தை விழா மாதிரி நடத்த வேண்டாம்" என்று விஜயாவை கண்டிக்கிறார். அதன்பிறகு விஜயா வக்கீலையும் தொடர்புகொண்டு, விவாகரத்து ஆவணங்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருமாறு கூறுகிறார். ரோகிணி கையெழுத்திட தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கிறார். அதற்கு வக்கீலும் சம்மதம் தெரிவிக்கிறார். இதனால் செம சம்பவம் காத்திருக்கிறது.
55
செம ட்விஸ்ட் வெயிட்டிங்
இறுதியாக, மனோஜ் தனியாக அமர்ந்து ரோகிணியின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டே உணர்ச்சிவசப்படுகிறார். ரோகிணியை உண்மையிலேயே பிரிந்துவிடுவாரா? இல்லை கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றுவாரா? முத்துவின் சந்தேகம் உண்மையாகுமா? மனோஜுக்கு இரண்டாவது திருமணம் நடந்த விஷயம் அனைவருக்கும் தெரியவருமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் அடுத்த வார எபிசோட்களில் பதில் கிடைக்க இருக்கிறது. ரசிகர்களிடையே இந்த திருப்பம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.