OTT-யில் ரசிகர்களை கட்டிப்போடும் கிளாசிக் ஹிட் ஹாரர் படம்... தில் இருந்தா தனியா பாருங்க...!

Published : Jul 21, 2026, 02:00 PM IST

OTT must watch movie : ஓடிடியில் பழைய படங்களுக்கும் மவுசு அதிகம். அந்த வகையில் 25 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த திகில் படம் ஒன்று தற்போது சக்கைப்போடு போடுகிறது. அந்த படத்தை பற்றி பார்க்கலாம்.

PREV
14
Must Watch Horror Film on OTT

திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. பேய், மர்மம், சஸ்பென்ஸ், உணர்ச்சிகள் என பல அம்சங்களை ஒன்றாகக் கலக்கும் இப்படங்கள், காலம் கடந்தாலும் பார்வையாளர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பிடித்துக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு, பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கிளாசிக் திரைப்படங்களும் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அப்படிப்பட்ட மறக்க முடியாத திகில் படங்களில் ஒன்றைப் பற்றி தான் இங்கே பார்க்க உள்ளோம்.

அந்த திகில் படத்தின் பெயர் 'தேவதூதன்' (Devadoothan). கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான இந்த மலையாள திரைப்படம் வெளியாகி சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், அதன் மர்மமான கதை மற்றும் பின்னணி இசைக்காக இன்றும் பேசப்பட்டு வருகிறது.

OTT : தமிழில் இப்படியொரு அடிபொலியான வெப் சீரிஸா? போலீஸ் vs சைக்கோ கில்லர்... ஒரு நிமிஷம் கூட போரடிக்காது!

24
இசைக் கல்லூரியை மையமாகக் கொண்ட மர்மக் கதை

பழமையான இசைக் கல்லூரியை பின்னணியாகக் கொண்டு நகரும் இந்தக் கதையில், பல ஆண்டுகளாக புதைந்திருக்கும் ஒரு மர்மம் மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வருகிறது. அங்கே நிகழும் விசித்திர சம்பவங்கள், மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் அதற்குப் பின்னால் இருக்கும் ஆன்மாவின் வலி ஆகியவை கதையின் மையமாக அமைந்துள்ளன. இந்தப் படத்தில் வழக்கமான திகில் படங்களைப் போல பயமுறுத்தும் பேய்கள் அல்லது கொடூரமான உருவங்கள் இடம்பெறுவதில்லை. அதற்கு பதிலாக, இசை வழியாக தனது வேதனையை வெளிப்படுத்தும் ஒரு ஆன்மாவின் உணர்வுபூர்வமான கதை சொல்லப்படுகிறது.

34
மோகன்லாலின் வித்தியாசமான நடிப்பு

இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மர்மத்தைத் தேடி செல்லும் அவரது பயணம், படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கிறது. அந்த ஆன்மாவின் உண்மையான அடையாளம் என்ன? அதன் பின்னணியில் மறைந்திருக்கும் காதல் கதை என்ன? என்ற கேள்விகளுக்கான பதில்தான் படத்தின் கிளைமாக்ஸ்.

'தேவதூதன்' படத்தின் மிகப்பெரிய பலம் அதன் பின்னணி இசை, ஒலியமைப்பு மற்றும் திரைக்கதை. ஒவ்வொரு காட்சியிலும் இசை உருவாக்கும் பதற்றம், பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டு செல்லும். அதே நேரத்தில், மனதை உருக்கும் காதல் கதையும் படத்திற்கு கூடுதல் வலுசேர்க்கிறது. சிபி இயக்கிய இப்படத்தில் மோகன்லால் உடன் ஜெயப்பிரதா, முரளி, வினீத் குமார், ஜெகதீஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு வித்யாசாகர் தான் இசையமைத்து இருந்தார். இப்படம் 2000ம் ஆண்டு டிசம்பர் 22ந் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

44
எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

திகில் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த தரமான திரைப்படங்களை விரும்புபவர்கள், 'தேவதூதன்' படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம். பயத்தை மட்டுமல்ல, உணர்ச்சிகளையும் இசையையும் ஒன்றாக அனுபவிக்க விரும்புபவர்களுக்கு இது தவறவிடக் கூடாத ஒரு கிளாசிக் திகில் திரைப்படமாக இருக்கும். மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படம் எந்த அளவுக்கு சஸ்பென்ஸ் நிறைந்ததாக இருக்குமோ அதே அளவுக்கு தேவதூதன் படமும் ரசிகர்களுக்கு செம த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும். மிஸ் பண்ணாம பாருங்க.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories