விஜய் முதல் மமிதா வரை... ஜனநாயகன் படத்துக்காக வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு? முழு லிஸ்ட் இதோ

Published : Jan 05, 2026, 02:08 PM IST

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் மற்றும் பணியாற்றிய பிரபலங்களின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது.

PREV
14
Jana Nayagan Salary Details

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் பாபி தியோல், மமிதா பைஜு, மதன் கெளரி, புஸ்ஸி ஆனந்த், பிரகாஷ் ராஜ், நரேன், கெளதம் மேனன், பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்தை கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சுமார் 380 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. ஜனநாயகன் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக ஜனவரி 9-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் பணியாற்றியுள்ள பிரபலங்களின் சம்பள விவரம் கசிந்துள்ளது.

24
சம்பளம் எவ்வளவு?

அதன்படி ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க அதிக சம்பளம் வாங்கியது விஜய் தான். இது அவரின் கடைசி படம் என்பதால், இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக ரூ.220 கோடி சம்பளமாக வாங்கி உள்ளாராம் விஜய். அவருக்கு அடுத்தபடியாக இப்படத்தின் இயக்குநர் எச்.வினோத், ரூ.25 கோடி சம்பளமாக வாங்கி உள்ளார். இதையடுத்து இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத், ரூ.13 கோடி சம்பளமாக வாங்கி உள்ளாராம். இதில் நாயகியாக நடித்துள்ள பூஜா ஹெக்டே மற்றும் வில்லனாக நடித்துள்ள பாபி தியோல் ஆகியோர் தலா ரூ.3 கோடி சம்பளமாக வாங்கி உள்ளார்கள்.

34
கம்மி சம்பளம் இவருக்கா?

ஜனநாயகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மமிதா பைஜுவுக்கு ரூ.60 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். இதுதவிர எஞ்சியுள்ள நடிகர், நடிகைகளுக்கு ரூ.8 கோடியே 60 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இப்படி இதில் பணியாற்றியவர்களுக்காக மொத்தம் வழங்கப்பட்ட சம்பளத் தொகை மட்டும் ரூ.272.6 கோடியாம். இப்படத்தின் ஷூட்டிங் மொத்தம் 148 நாட்கள் நடைபெற்று இருக்கிறது. அதற்காக 48 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இருக்கிறது.

44
சிஜி காட்சிகளுக்கு 5 கோடி

மேலும் இப்படத்தின் செட் ஒர்க் பணிகளுக்காக ரூ.15 கோடி செலவிடப்பட்டு உள்ளதாம். இதுதவிர இப்படத்தில் நிறைய சிஜி காட்சிகளும் இடம்பெற்று உள்ளதாம். அதற்காக ரூ.5 கோடி செலவழித்து சிஜி பணிகளை முடித்துள்ளார்களாம். இப்படி ஒட்டுமொத்தமாக 380 கோடி செல்வில் ஜனநாயகன் திரைப்படம் தயாராகி இருக்கிறது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி 1000 கோடி வசூலை வாரிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை விஜய் கெரியரில் லியோ படம் 610 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்து வரும் நிலையில் அந்த சாதனையை ஜனநாயகன் முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories