நடிகை ரம்யா கிருஷ்ணன் அவரது காதல் கணவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில், அதுகுறித்து இயக்குநர் கிருஷ்ண வம்சி விளக்கம் அளித்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற படம் என்றால் அது படையப்பா தான். அதில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நீலாம்பரி என்கிற கேரக்டரில் அதகளம் செய்திருந்தார். அந்த கதாபாத்திரத்தை செய்ய தனி தில்லு வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் ரஜினிக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது தெரிந்தும் துணிச்சலாக அந்த கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் ரம்யா கிருஷ்ணன்.
24
பான் இந்தியா நடிகையான ரம்யா கிருஷ்ணன்
தென்னிந்திய திரையுலகில் பாப்புலராக இருந்த ரம்யா கிருஷ்ணனை பான் இந்தியா அளவில் பாப்புலர் ஆக்கியது பாகுபலி திரைப்படம் தான். அதில் ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரத்திற்கு இவரை தவிர வேறு யாரும் நடித்திருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு தன்னுடைய கம்பீர நடிப்பால் அப்படத்திற்கே பலம் சேர்த்து இருந்தார். அப்படத்திற்கு பின்னர் அவரது ரசிகர் பட்டாளம் பான் இந்தியா அளவில் விரிவடைந்தது.
34
ரம்யா கிருஷ்ணன் கணவர்
நடிகை ரம்யா கிருஷ்ணன், 2003ல் இயக்குனர் கிருஷ்ண வம்சியை மணந்தது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் இவர்களது காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரித்விக் என்ற மகன் உள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவரும் விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் இயக்குநர் கிருஷ்ண வம்சி தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
நாங்கள் விவாகரத்து செய்யவில்லை என கிருஷ்ண வம்சி கூறினார். அவர் சென்னையிலும், நான் ஹைதராபாத்திலும் இருப்பதால் நாங்கள் பிரிந்துவிட்டதாக வதந்திகள் வந்தன. எங்கள் திருமண வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் கணவன், மனைவியாகவே இருக்கிறோம் எனக் கூறி தன்னைப்பற்றிய சர்ச்சைகளுக்கு ஒரே அடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கிருஷ்ண வம்சி. நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழில் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.