நடிகை ராஷ்மிக்காவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய விஜய் தேவரகொண்டா, தற்போது அவரை கழட்டி விட்டு விட்டு... விவாகரத்து ஆன நடிகையுடன் ஒரே ரூமில் கூத்தடித்து வருவதாக பிரபலம் ஒருவர் கொளுத்தி போட்டு உள்ள தகவல், திரையுலகினர் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நடிகை ராஷ்மிகா மந்தனா, கன்னட திரை உலகின் மூலம் அறிமுகமாக இருந்தாலும்.. இவரை மிகவும் பிரபலம் அடைய செய்தது தெலுங்கில், விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த 'கீதா கோவிந்தம்' திரைப்படம் தான் பிரபலமடைய செய்தது.
26
இப்படத்தில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரியும், ரசிகர்கள் மனதை மிகவும் கவர்ந்த நிலையில்... இப்படத்தை தொடர்ந்து டியர் காம்ரேட், படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர். இந்த படத்தில் இருவரின் முத்த காட்சிகளும் இடம்பெற்று பார்ப்பவர்களை திணறடித்து.
இந்த இரு படங்களின் மூலம் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியதாக கிசுகிசுக்கள் எழுந்தது. இதற்கு ராஷ்மிகா பலமுறை இல்லை என்று கூறிய போதும், சமீபத்தில் இருவரும் சீக்ரட்டாக துபாய்க்கு ட்ரிப் போனபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் லீக் ஆகி இருவரையும் ரசிகர்கள் முன்பு வசமாக சிக்க வைத்தது.
46
பல்வேறு தகவல்கள் இவர்களுடைய காதல் குறித்து வெளியாகி வந்தாலும், அது பற்றி சற்றும் அலட்டிக் கொள்ளாமல் இருவருமே தங்களின் திரைப்பட பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ராஷ்மிகா மந்தனா,நடிப்பில் விஜய்க்கு ஜோடியாக நடித்த 'வாரிசு' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஹிந்தியில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் மற்றும் தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அதேபோல் நடிகர் விஜய் தீவிர கொண்டாவிஜய் தேவரகொண்டா தற்போது நடிகை சமந்தாவுக்கு ஜோடியாக குஷி என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக, காஷ்மீரில் நடந்து வருகிறது.
66
இந்நிலையில் பிரபல திரைப்பட விமர்சகரும், சென்சார் போர்டு உறுப்பினருமான உமர்சந்து தன்னுடைய twitter பக்கத்தில் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் தங்களுடைய காதலை பிரேக் அப் செய்து விட்டதாகவும், எனவே விஜய் தேவரகொண்டா சமந்தா மீது காதல்வயப்பட்டுள்ளார் என கூறியுள்ளார். அதே போல் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும், ஸ்ரீநகரில் ஒரே அறையில் தங்கி கூத்தடித்து வருவது போன்று... போட்டுள்ள பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.