மலையாளத்தில் வெளியான 'மயோகம்' என்கிற திரைப்படத்தின் மூலம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானவர் மம்தா மோகன்தாஸ். மலையாளத்தில் முன்னணி கதாநாயகியான இவர், தமிழில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக 'சிவப்பதிகாரம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 'குரு ஏன் ஆளு', 'தடையறை தாக்க', 'எனிமி' போன்ற சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க இருந்த பட வாய்ப்பை, நடிகை நயன்தாரா பட குழுவினரிடம் கூறிய ஒற்றை வார்த்தையால் இழந்தேன் என கூறியுள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் நடித்த திரைப்படம் குசேலன். இப்படத்தில் பசுபதி, மீனா, ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகை நயன்தாரா ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். இப்படத்தில் மம்தா மோகன் தாஸ் துணை இயக்குனராக பணியாற்றினார். இதை தொடர்ந்து, ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது போன்று ஒரு கதாபாத்திரம் இருந்ததாம் அதில் மம்தா மோகன் தாஸ் நடிக்க இருந்த நிலையில்... நடிகை நயன்தாரா இந்த கேரக்டருக்கு ஹூரோயினே தேவையில்லை என பட குழுவினரிடம் தெரிவிக்க, உடனே பட குழுவும் அந்த காட்சியை அதிரடியாக நீக்கி விட்டதாக கூறப்படுகிறது.
நயன்தாரா கூட இப்படி பண்ண மாட்டாங்க! வயசுக்கு மீறிய செயலால்... கல்லூரி விழாவில் அசிங்கப்பட்ட அனிகா..!
அதேபோல் நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியாகி, சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற... அருந்ததி படத்தில் முதலில் நடிக்கும் மம்தா மோகன்தாசுக்கு தான் வாய்ப்பு வந்ததாம். ஆனால் அப்போதுதான் தெலுங்கு திரையுலகில் புதிதாக அறிமுகமான இவர், ஒருவித பயத்தின் காரணமாக இந்த கதாபாத்திரத்தில் நடித்த தயக்கம் காட்டவே, பின்னர் இந்த வாய்ப்பு அனுஷ்காவுக்கு சென்றுள்ளது. பின்னர் இப்படம் அனுஷ்கா திரையுலக வாழ்க்கையில் மிக முக்கிய படமாக அமைந்தது மட்டுமின்றி, சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இப்படத்தை இழந்ததற்காக பல நாள் பீல் பண்ணி உள்ளதாக கூறியுள்ளார் மம்தா என்பது குறிப்பிடத்தக்கது.