நடிகை சாய் பல்லவி, மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மலர் டீச்சராக வந்து இளசுகளின் மனதை கொள்ளையடித்தார். இப்படத்தின் வெற்றிக்கு சாய் பல்லவியின் நடிப்பும் முக்கிய காரணமாக அமைந்தது. இதையடுத்து தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்த அவர், மாரி 2, என்.ஜி.கே., தியா போன்ற படங்களில் நடித்தார்.