தமிழ் சினிமாவில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அந்தாலஜி படமான 'அவியல்' மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதை தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் முப்பரிமான கதையாக வெளியான 'மாநகரம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, இப்படத்தின் கதையை... லோகேஷ் கனகராஜ் கொண்டு சென்ற விதம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளை குவித்தது.
தற்போது அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்திற்கு பின்னர் மீண்டும் நடிகர் விஜய்யை வைத்து இயக்கி வரும் திரைப்படம் 'லியோ'. கேங் ஸ்டார் கதையம்சத்துடன் எடுக்கப்படும் இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார்.
பிரபலங்கள் அனைவரும், லோகேஷ் கனகராஜை கட்டி பிடித்து... வாழ்த்து கூறி உள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருவதோடு, ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.